தர்மபுரி: எம்பி முன்னிலையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

70பார்த்தது
தர்மபுரி திமுக கட்சி அலுவலகத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிழக்கு
மாவட்ட அவைத்தலைவர் சி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ மணி அவர்கள் முன்னிலை வகித்தார். நகர கழக செயலாளர் நாட்டாண் மாது வரவேற்பு உரையாற்றினார்

கூட்டத்தின் தீர்மானங்களாக
1. துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அவர்களின் பிறந்த நாள் விழா குறித்தும்,
2. தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும், 3. ⁠வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்துதல் முகாம் குறித்தும், 4. கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி