அரூர்: கே. ஈச்சம்பாடி அணையிலிருந்து நீர் வெளியேற்றம்
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இந்த அணையில் இருந்து தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தென்பெண்ணை ஆறு செல்லும் தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கம்பைநல்லூர் அருகே உள்ள கே. ஈச்சம்பாடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையிலிருந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி இன்று(அக்.19) காலை முதல் விநாடிக்கு 2124 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.