கடலூர்: விருத்தாசலம் அருகே வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மு. பரூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்ராஜ் மகன் செந்தில் குமார். இவர் சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது மகளான 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் காவல் துறையினர் செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.