பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தற்போதைய ஆட்சிக் காலத்திற்குள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத பிரமுகர் ஒருவர் கூறிய தகவலை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், ஒரே தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சிகளை அவர் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.