இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7 ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட் டது. விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 1, 423 இடங்களில் 10 அடி உயர முள்ள விநாயகர் சிலைகளை பக்தர்கள் பிரதிஷ்டைசெய்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்திமுடிந்து 3-வது, 5-வது மற்றும் 7-வது நாட்களில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரி, குளம், கடற்கரை உள் ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியில் நேற்று(செப்.11) 26 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ரூபநாராயணநல்லூர் ஏரியில் கரைக்கப்பட்டது.