விருத்தாசலம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் மகன்
தனுஷ் (வயது 21). இவர் மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தன் வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்கைக்காக விருத்தாசலம் காந்தி நகர் பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு
தனுஷ் அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோத்னை செய்தபோது திருமணவயதை அடையாத நிலையில் சிறுமி கர்ப்பமாகி இருப்பது தெரியவந்ததை அடுத்து இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில்
தனுஷ் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.