கடலூர் மாவட்டத்தில் 1521 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்

68பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் 1521 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் இருந்த படி காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகடன் இணைப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் பள்ளியில் 1, 521 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 101கோடி வங்கி கடன் இணைப்பை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் வழங்கி தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி