தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 264 கோடி செலவில் கட்டிய 956 புதிய வகுப்பறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் M. R. R. இராதாகிருஷ்ணன் M. L. A விருத்தாசலம் ஒன்றியம் தொரவலூர் ஊராட்சி அரசு மேல் நிலைப்பள்ளியில், 127. 08 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட 6 வகுப்பறைகளை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.