
விருத்தாசலம்: அரசு கல்லூரி அருகே புதர் செடிகள் அகற்றம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி மாணவியர் விடுதி அருகே புதர் செடிகள் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் புதர் செடிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.