நடிகரும் இயக்குனருமான பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் (48) மாரடைப்பால் இன்று (மார்ச்.25) மாரடைப்பால் அவரது இல்லத்தில் காலமானார். மனோஜிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்துள்ளது. அதன் பின்னர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு திரைத்துறையினரை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோஜ் 1999ஆம் ஆண்டு வெளியான "தாஜ் மஹால்" என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.