கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான காவல் துறையினர் குப்பநத்தம் புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல் துறையினர் வழிமறித்தனர்.
இதில் போலீசாரை கண்டதும் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிச்சென்றார். இதையடுத்து அந்த லாரியை போலீசார் பார்த்தபோது அதில் கூழாங்கற்கள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.