வால்பாறை - Valparai

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க முயற்சி

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க முயற்சி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுமுகை வனச்சரக பகுதியான சென்னா மலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், மலை அடிவார பகுதியான அறிவொளி நகர் பகுதியில் பொதுமக்கள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அடிக்கடி வேட்டையாடுவதால், மனிதர்களை தாக்கும் முன் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அறிவொளி நகர் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கூண்டில் நாய்களை வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையினரின் இந்த நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்