கோவை பேரூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.மு.க தலைவர் விஜய பிரபாகரன், தே. மு. தி. க 20-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தோம்.
அனைத்து தொகுதிகளிலும் சுமார் 3, 000 பேருக்கு அன்னதானம் வழங்கினோம். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 14 அன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினோம். அதில் 16 குழந்தைகள் ஆண் குழந்தைகள், கேப்டன் மீண்டும் பிறந்து வந்ததாகவே கருதினேன், மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அன்னபூர்ணா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குகின்றனர்.
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இதை தேவையற்ற விஷயமாக நான் பார்க்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தார்களா என அவர் தான் கூற வேண்டும் என்றும் இறுதியாக, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசினார். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கள்ளச்சாராயம் என பிரச்சனைகள் உள்ளது. தேவை இல்லாமல் கார் பந்தயம் நடத்தினர். இதெல்லாம் விளம்பரத்திற்கான நடவடிக்கையாக பார்க்கிறேன், என்று முடித்தார்.