வால்பாறை: தடுப்புச்சுவர் மீது அரசு பஸ் உரசல்
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் நேற்று திருப்பூருக்கு பேருந்து இயக்கப்பட்டது. பேருந்து அட்டகட்டி வழியாக பொள்ளாச்சி நோக்கி செல்லும் போது, 9வது கொண்டை ஊசி வளைவு அருகே, எதிரே பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரிக்கு சைடு கொடுக்க முயன்றது. அப்போது பேருந்தின் பின் சக்கரம் சிறிய பள்ளத்தில் சிக்கியதோடு, அருகில் உள்ள தடுப்புச்சுவர் மீது உரசி நின்றது. குறுகலான ரோடு என்பதால், வாகனங்கள் சைடு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், அரசு பஸ் டிரைவர் பாலுவின் சாமர்த்தியத்தால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பின் டிப்பர் லாரி பின் நோக்கி நகர்த்தியதன் பின், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் போக்குவரத்து சீரானது. அரசு பேருந்து மற்றும் டிம்பர் லாரி எதிர் எதிரே நின்றதால், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் நேற்று ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.