வால்பாறை - Valparai

மலர் மற்றும் அலங்கார நாற்றங்கால் தொழில்நுட்ப பயிற்சி!

மலர் மற்றும் அலங்கார நாற்றங்கால் தொழில்நுட்ப பயிற்சி!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மலர் மற்றும் அலங்கார பயிர்களுக்கான நாற்றாங்கால் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி செப்டம்பர் 19 அன்று நடைபெற உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4. 30 மணி வரை நடைபெறும். பொதுமக்கள், அறிவியல் மாணவர்கள், புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். மலர் மற்றும் அலங்கார பயிர்களின் நாற்றங்கால் குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ. 1, 000 கட்டணம் செலுத்தி செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு முனைவர் சு. கார்த்திகேயன் (99654-35081), முனைவர் சீ. பா. தாமரைச்செல்வி (9843338666) ஆகியோரை மலரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது.

வீடியோஸ்


கோயம்புத்தூர்