வால்பாறை - Valparai

வால்பாறை: வெறிச்சோடியது படகு இல்லம்

வால்பாறை: வெறிச்சோடியது படகு இல்லம்

வால்பாறைக்கு, சுற்றுலா பயணியர் வருகை குறைந்ததால், படகு சவாரி வெறிச்சோடி காணப்படுகிறது. வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகம் உள்ளது. அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் காட்சிமுனை பகுதி, நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில், வால்பாறையில் ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், பகலில் வெயிலும், இடையிடையே சாரல்மழையும் பொழிகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது. தற்போது, சுற்றுலா பயணியர் வருகை குறைந்துள்ளதால், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, நல்லமுடி காட்சி முனைப்பகுதி உள்ளிட்ட பகுதிகள் விடுமுறை நாளான நேற்றும் வெறிச்சோடி காணப்பட்டது.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
உக்கடம்: கார் குண்டுவெடிப்பு மேலும் மூவர் கைது!
Oct 21, 2024, 17:10 IST/கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

உக்கடம்: கார் குண்டுவெடிப்பு மேலும் மூவர் கைது!

Oct 21, 2024, 17:10 IST
உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான ஜமீஷா முபின் என்பவர் காருக்குள் இருந்தவாரே உடல் கருகி உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அபூ அனிபா, சரண் மாரியப்பன், பாவாஸ் ரகுமான் ஆகியோரை இன்று NIA அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.