சிங்காநல்லூர் - Singanallur

ஏர்போட்டில் சிக்கிய தங்கம்: பெண்ணை ஏமாற்றிய நபர்

ஏர்போட்டில் சிக்கிய தங்கம்: பெண்ணை ஏமாற்றிய நபர்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(37). இவர் மலேசியாவில் நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் மலேசியாவில் இருந்து கோவை வந்த தனது சகோதரி ரஜீனாவிடம் ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொடுத்து அனுப்பினார். கோவை ஏர்போர்ட்டில் ரஜீனாவின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவரிடமிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ரஜீனாவிற்கு கோவை காளப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். அவர் ரஜீனாவிடம் தனக்கு கோவை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டுத்தர உதவுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக பலருக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். இதை நம்பிய ரஜீனா ரூ. 9.50 லட்சத்தை பாலகிருஷ்ணனிடம் கொடுத்தார். ஆனால் அவர் சொன்ன படி நகைகளை மீட்டு தரவில்லை. ரஜீனா இது குறித்து தனது சகோதரர் அப்துல் ரகுமானிடம் தெரிவித்தார். ரகுமான் நேற்று (செப்.,20) பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా