தமிழ்நாட்டு கோவில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (செப்., 21) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இறை அன்பர்களுக்கு எதிரான ஆட்சியாக திசை திருப்புவதற்கு தொடர்ந்து சிலர் முயற்சிக்கின்றனர். பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு நெய் பயன்படுத்துவதாக வதந்தி பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.