

கோவை: அருகருகே பறந்த பா. ஜ. க மற்றும் தி. மு. க கட்சி கொடிகள்
கோவை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க விமான நிலைய சாலையில் பா.ஜ.க மற்றும் தி.மு.க கொடிகள் அருகருகே பறக்க விடப்பட்டு இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. கோவையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் நேற்று கோவை வருகை புரிந்தார், அதேபோல சேலத்தில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை செல்வதற்காக கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். ஒரே நேரத்தில் இரு தலைவர்களும் விமான நிலையத்திற்கு வரும் நிலைமை இருந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்பதற்காக விமான நிலைய சாலையில் அருகருகே பா.ஜ.க மற்றும் தி.மு.க கட்சிக் கொடிகள் நாட்டப்பட்டு உள்ளன. இதனால் விமான நிலைய சாலையில் இரு தலைவர்களையும் வரவேற்க திரண்டு வரும் பா.ஜ.க மற்றும் தி.மு.க தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.