கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (72). இவரது கணவன் இறந்துவிட்ட நிலையில், தனது மகன் லோகநாதன் (50), மற்றும் மருமகள் விஜயலட்சுமி (45) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் நடந்த தகராறால், கணவனை பிரிந்து தனது தந்தை வீட்டிற்கு சென்ற விஜயலட்சுமி, அவ்வப்போது மாமியார் வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்துள்ளார். அப்போது, கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பாப்பாத்தி கூறியதால் ஆத்திரமடைந்து அவர் தலைமீது கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.