
கோவை: ‘டைமிங்’ பிரச்னையில் தனியார் பஸ் கண்டக்டர்கள் மோதல்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் இடையே டைமிங் காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதேபோல், நேற்று காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில், 2 தனியார் பஸ் கண்டக்டர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் சஞ்சீவ் குமார்(19) என்பவர், மற்றொரு தனியார் பஸ் கண்டக்டர் காரமடை சிஎம்கே நகரை சேர்ந்த அரவிந்தன்(22) என்பவரை தாக்கினார். இது குறித்து அரவிந்தன் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சஞ்சீவ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.