
கோவை மாநகரில் 378 போலீசார் இடமாற்றம்
கோவை மாநகரில் பீளமேடு, காட்டூர், உக்கடம், சுந்தராபுரம், ரத்தினபுரி, செல்வபுரம், கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட 20 காவல் நிலையங்கள் உள்ளன. ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தவிர 208 பேர் தங்களுக்கு நகர காவல் நிலையங்களுக்கு இடையே பணியிட மாற்றம் செய்யக்கோரி போலீஸ் கமிஷனரிடம் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்நிலையில், கான்ஸ்டபிள் முதல் எஸ்ஐ வரை 378 போலீசார் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் கோவை மாநகர காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர். இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பிறப்பித்தார்.