கோவை: மர ஏலத்தில் முறைகேடு- வியாபாரிகள் போராட்டம்

83பார்த்தது
கோவை திருச்சி சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் அன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரையிலான மரங்களை ஏலம் விடுவதில் முறைகேடு நடப்பதாக மர வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

குறிப்பிட்ட இரண்டு நபர்களுக்கு மட்டும் ஏலம் விடுவதற்காக, அதிகாரிகள் தன்னிச்சையாக ஏலத்தொகையை உயர்த்தியுள்ளனர் என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஏலத்திற்கான வைப்புத்தொகை முன்பு ரூ. 2.5 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது அதிகாரிகள் அதை ரூ. 35 லட்சமாக உயர்த்தியுள்ளனர். இந்த திடீர் உயர்வு, சிறு வியாபாரிகளை ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. நாங்கள் பல ஆண்டுகளாக இந்த ஏலத்தில் பங்கேற்று வருகிறோம். ஆனால், இந்த முறை அதிகாரிகள் வேண்டுமென்றே ஏலத்தொகையை உயர்த்தியுள்ளனர். 

இது ஒரு சில பெரிய வியாபாரிகளுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர் கூறினார். ஏல நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அதிகாரிகள் குறிப்பிட்ட இரண்டு நபர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படுவதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த முறைகேடுகளைக் கண்டித்து, வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலை அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி