கோவை காந்தி பார்க் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாடத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை,
அம்பேத்கர், இந்திரா காந்தி ஆகியோரை
இழிவாக பேசிய உள்துறை அமைச்சரை கண்டித்தும்,
தமிழ்நாட்டில் முன்மொழிக் கொள்கையை நடைமுறை படுத்துவோம், இந்தியை திணிப்போம், புதிய கல்விக் கொள்கையை திணிப்போம் என்று இறுமாப்போடு சொல்லி வருகின்ற ஒன்றிய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கின்றது என தெரிவித்தார்.
அரசு இயந்திரங்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு இந்த ஜனநாயகத்தை ஒன்றிய அரசி சீர்குலைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும்,
நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் என்பது வலிமையான சட்டம், இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை நசுக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார். ஒரே தேர்தல் , ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை , ஒரு மொழி, ஒரு அதிபர் என்ற திட்டத்தில காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும், இதன் உச்சபட்சமாக தான் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தமிழ்நாட்டடில், மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை குறைத்து 31 ஆக மாற்றப்போவதாக கொக்கரிக்கிறார்கள் என தெரிவித்தார்.