கோவை: ஊழலில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றவர்கள் திமுகவினர்!

74பார்த்தது
கோவையில் நடைபெற்ற பாஜக அலுவலகம் திறப்பு விழாவில் இன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு முழுவதுமாக ஊழலில் மிதக்கிறது. திமுகவினர் ஒவ்வொருவரும் ஊழலில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றவர்கள். அதில் ஒரு தலைவர் வேலை வாங்கி கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கி மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறார். மற்றொரு தலைவர் மணி லாண்டரிங் வழக்கு மற்றும் செம்மணல் கடத்தல் வழக்குகளையும் சிக்கிக் கொண்டிருக்கிறார், இன்னும் ஒரு தலைவர், அவருடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்து வைத்திருப்பதாக வழக்கு இருக்கிறது. இன்னும் ஒரு தலைவர், நிலக்கரியில் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறார். மற்றும் ஒரு தலைவர் 6 ஆயிரம் கோடி CRIDP ஊழலில் சிக்கி இருக்கிரார். அதேபோல என்னால் மறக்கவே முடியாது 2ஜி ஊழல். இதைப் பார்த்தால் யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ, அவர்களையெல்லாம் திமுக தேடி மெம்பராக சேர்த்துள்ளது என கடுமையாக சாடி பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி