கோவை: கணினி ஆசிரியர் பாடம் நடத்த மறுப்பு - மாணவர்கள் புகார்

71பார்த்தது
கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றும் டெய்சிராணி, மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் புறக்கணிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அவர்களின் செய்முறை தேர்வில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக நேற்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், அவர்கள் பலமுறை பள்ளி முதல்வரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பள்ளி இப்படித் தான் இயங்கும், வேண்டுமென்றால் படியுங்கள், இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர் என்றும், முதன்மை கல்வி அலுவலருக்கும் புகார் அனுப்பியும் எந்த பலனும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கணினி ஆசிரியர் டெய்சிராணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது உரிய விசாரணை நடத்தி, மாணவர்களின் நலன் கருதி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி