கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த 20-ம் தேதி சுங்கம் பகுதியில் உள்ள சைனா வேலி உணவகத்தில் சிக்கன் வாங்கன் சூப் ஆர்டர் செய்துள்ளார். ஸ்விக்கி மூலம் டெலிவரி செய்யப்பட்ட அந்த சூப்பை அவரது மூன்று வயது குழந்தை சாப்பிட்டபோது, அதில் பூச்சிகள் மிதந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கார்த்திகேயன் ஸ்விக்கி மற்றும் உணவகத்திடம் புகார் அளித்தார். ஆனால், ஸ்விக்கி தரப்பில் உணவு தரத்திற்கு அவர்கள் பொறுப்பல்ல என்று கைவிரித்துவிட்டதாகவும், சைனா வேலி உணவகத்தினர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கார்த்திகேயன் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கும் நிலையில் உணவகங்களால் உயிர்கள் பறிபோகும் முன்பு, உணவுத்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.