கோவை: கணவரை காப்பாற்ற கோரி பெண் காவல் ஆணையாளரிடம் புகார்

82பார்த்தது
கோவை, பேரூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் மீது சந்தன மரக்கட்டை திருட்டு வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விஜயனையும், அவரது நண்பர் ரங்கநாதனையும் காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர், காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதுகுறித்து விஜயனின் மனைவி சத்யா காவல் ஆணையாளரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். சத்யாவின் புகாரில், சந்தன மரக்கட்டை காணாமல் போனதால், எனது கணவரையும், ரங்கநாதனையும், பொன்னுச்சாமி என்பவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சித்திரவதை செய்துள்ளனர். மரத்தை வெட்டி விற்றதாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டினர். கோவையில் எங்கு சந்தன மரம் காணாமல் போனாலும், எனது கணவரையும், அவரது உறவினர்களையும் குறிவைத்து காவல்துறையினர் சித்திரவதை செய்கின்றனர். எனவே, வடவள்ளி காவல் நிலையத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி