கோவை: சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து!

63பார்த்தது
கோவை, ராமநாதபுரத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஸ்ரீ பாலாஜி ஹோம் நீட்ஸ் என்ற தனியார் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. நேற்று இரவு, இந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், கடை முழுவதும் தீ பரவியதால், அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்து இரவு நேரத்தில் நிகழ்ந்ததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி