பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், 9வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் கறுப்பு நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் சீனாவின் வெய் யீ-யை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.