கோவை: தனியார் பேருந்தில் பெண் பயணியிடம் ரகளை!

80பார்த்தது
கோவையில் நேற்று காலை தனியார் பேருந்தில் பெண் பயணியிடம் ரகளையில் ஈடுபட்ட ஆசாமி கைது செய்யப்பட்டார். வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் அந்த தனியார் பேருந்தில் ஏறினார். பேருந்தில் இருந்த ஒரு ஆசாமி பெண்கள் இருக்கையில் அமர முயன்றார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேருந்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சக பயணிகள் அவரை சமாதானம் செய்து கோவை பந்தயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் போலீசார் அந்த ஆசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி