கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காந்தி, ஜவுளித்துறை இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என முதலமைச்சர் மு. க ஸ்டாலின் விரும்புகிறார். அதனால் பழைய மில்களில் தொழில்நுட்ப ரீதியாக உள்ள பழைய இயந்திரங்களை மாற்றி அமைக்க, மானியம் அதிகரித்து வழங்கப்படுகிறது. இது நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. முதலில் 2 சதவீதம் மானியம் கொடுக்கப்பட்டது. தற்போது 6 சதவீதம் வரை கொடுக்கப்படுகிறது. இந்திய பருத்தி கழகத்திற்கு வாங்கும் பருத்திக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள குடோன்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது தமிழகத்திலேயே குடோன் அமைத்து கிடைக்கும் படி செய்து பருத்தி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய ஜவுளி கொள்கை பத்து நாட்களுக்குள் நிச்சயம் அறிவிக்கப்படும் என்று கூறினார்.