சென்னையில் இருந்து விமான மூலம் நேற்று கோவை வந்த முன்னாள் முதல்வர்
ஓ. பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்பு
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
அவரிடம் செய்தியாளர்கள்,
விரக்தியில் இருக்கிறார் ஓபிஎஸ் என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு, உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை, இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், அவர் என்ன பேசினாலும் பேசிவிட்டு போகட்டும் ,
அவர் பேசுகின்ற மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும், அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார். மேலும் கொங்குநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் கொங்கு நாட்டின் தங்கங்கள் என தெரிவித்த அவர்,
நீண்ட காலம் கட்சிக்காக நானும் செங்கடே்டையனும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம் எனவும்,
கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க கூடியவர் உன்னதமானவர் செங்கோட்டையன் என தெரிவித்தார். அதிமுக
கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது, அதிமுக விசுவாசிகள் அனைவரும் இணைய வேண்டும் என நினைக்கின்றனர் என தெரிவித்தார்.