கோவை மக்கள் சேவை மையம் மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து பங்காற்றிய கார்பன் சமநிலை பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். கார்பன் சமநிலையின் முக்கியத்துவத்தை கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், தினமும் 7000 மாணவர்கள் தங்கள் கைபேசியை அணைத்து வைத்து கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, 1174 வெர்ச்சுவல் மரங்கள் நடப்பட்டதுடன், 29433 கிலோகிராம் அளவிற்கு கார்பன் சமநிலை எட்டப்பட்டது. இந்த மகத்தான சுற்றுச்சூழல் நல் மாற்றத்திற்கு உதவிய ஆசிரியர்களுக்கும், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கும் கார்பன் சமநிலை விருதுக்கான சான்றிதழ்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார்.
இந்நிகழ்வு குறித்து அவர் கூறுகையில், மாணவர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த உலகை உருவாக்க இதுபோன்ற முயற்சிகள் அவசியம்,
இந்த விழிப்புணர்வு நடைபயணம் கார்பன் சமநிலையின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பசுமையான உலகை உருவாக்கவும் ஒரு உந்துதலாக அமையும் என்று கூறினார்.