மோடி ரேக்ளா பந்தய நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட ராதிகா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, வெளிநாட்டு விளையாட்டுக்கள் நிறைய இருந்தாலும் தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டுக்கள் நிறைய உள்ளது. ரேக்ளா பந்தயத்தை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தும் பாஜக மாவட்ட தலைவர்களுக்கு வாழ்த்துக்கள். காளைகளை தெய்வமாக குழந்தையாக வளர்த்து இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஜல்லிக்கட்டை போன்று ரேக்ளாவுக்கும் மைதானம் அமைக்க பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இசிஆர்-ல் நடந்த சம்பவம் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். பெண்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு வழங்க வேண்டும். பட்ஜெட் மிடில் கிளாஸ் மக்களுக்கு பயனுள்ள பட்ஜெட்டாக இருந்தது என்றும், தமிழக அரசியல் களத்தில் அவரவர் கருத்தையே முன் வைக்கிறார்கள், அதில் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.