தமிழக அரசு மற்றும் உயிர் அரசு சாரா சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய உயிர் சாலை பாதுகாப்பு ஹேக்கதான் 2025 போட்டியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தரம், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள், உயிர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், உயிர் அமைப்பின் அறங்காவலரும், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவருமான மலர்விழி உள்ளிட்டோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 145 குழுவினர் பங்கேற்றனர். நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் பிரிவில் தலா மூன்று குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பங்கேற்ற குழுவினருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.