கோவை: சிவராத்திரி- 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

56பார்த்தது
கோவை: சிவராத்திரி- 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பழனி மற்றும் மதுரைக்கு மொத்தம் 100 சிறப்புப் பேருந்துகளும், பூண்டி மற்றும் ஈஷா யோகா மையம் பகுதிகளுக்கு கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 பேருந்துகள் உட்பட மொத்தம் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி