கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, சொத்து வரிக்கு அபராதம் விதிப்பதாக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், சொத்து வரிக்கு அபராதம் விதிப்பதாக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்ற கேள்விக்கு, ட்ரோன் சர்வே என்பதை முதல்வர் நிறுத்த சொல்லிவிட்டார், சொத்து வரிகள் அபராத விதி என்று சொல்லுவதற்கு காரணம் என்னவென்றால், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக செலுத்தி விட்டால் இதற்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைத்துக் கொள்கிறோம். அதேபோல் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செலுத்துபவர்களுக்கு அபராதம் வசூலிக்கிறோம். தற்போது முதல்வர் அதையெல்லாம் நிறுத்த சொல்லிவிட்டார். இனிமேல் வருகை மட்டும் தான் வசூல் செய்வோம் என்று கூறினார், ஏற்கனவே ஜோன் சர்வே மூலம் விதிக்கப்பட்ட வரிகளும் ரத்து செய்யப்படும் என்று கூறினார். வெள்ளலூர் பேருந்து கட்டிடம் என்ன நிலைமையில் இருக்கிறது என்ற செய்தியாளர் கேள்விக்கு,
வெள்ளலூரில் ஏற்கனவே பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது, அதனுடைய சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது, திருச்சியில் இருந்து வந்து கோவையை இணைக்கும் சாலையில், சாலையை விரிவு படுத்தினால் மட்டும்தான் அது சாத்தியமாகும் என்று கூறினார்.