பொள்ளாச்சி - Pollachi

பேரூர்: பருவமழை பெய்கிறது-சோளம் விதைக்கலாம்

பேரூர்: பருவமழை பெய்கிறது-சோளம் விதைக்கலாம்

கோவை மாவட்ட வேளாண் இணை இயக்கநர் வெங்கடாசலம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் துவங்கியுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 597 மி. மீ மழைப்பொழிவு உள்ளது. இறவை மற்றும் மானாவாரி நிலங்கள் கோடை உழவு செய்து, சோளம், பயறு வகைகள் விதைக்க தயார் நிலையில் உள்ளன. இந்தப் பருவத்தில், சோளம் பயிரிட ஏற்ற ரகங்களான, கோ 32 மற்றும் கே12 விதைகள், வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு, வினியோகிக்கப்படுகின்றன. கோ 32 ரகம் இறவை, மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. குருத்து ஈ மற்றும் குருத்துப்புழு தாக்குதலை எதிர்க்க வல்லது, 14. 66 சதவீத புரதம் கொண்டுள்ளது. ஹெக்டே ருக்கு 3100 கிலோ மகசூல் தரும். தட்டு 11 டன் கிடைக்கும். கால்நடைகள் ருசித்துச் சாப்பிடும், கழிக்காது. கே 12 மானாவாரிக்கு ஏற்றது, சாயாது. எக்டருக்கு 3500 கிலோ மகசூல் தரும். இந்த இரு ரக விதைகளும், மாவட்டத்தின் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் 50 சதவீத மானியம் அல்லது கிலோவுக்கு ரூ. 30 இதில் எது குறைவோ, அந்த அளவு மானியத்தில் வினியோகிக்கப்படுகிறது. விதையுடன் கலந்து விதைக்கத்தேவைான சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள், சிறு தானிய நுண்ணூட்டம் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా