கேரளாவில் கனிம வளங்களை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு குவாரிகள் குறைந்த அளவே செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இப்படி கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்களை ஏற்றி செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் கனிமவளக் கொள்ளை தொடர்பாக பொள்ளாச்சி, குறிச்சி மற்றும் கோவை பகுதிகளில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் யாரால் ஒட்டப்பட்டது என்பது தெரியாத நிலையில் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர். பங்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.