கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

80பார்த்தது
பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேளாண்மைத் துறை செய்ய வேண்டிய கணினி வழி பயிராய்வு பணியை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதலாக வழங்குவதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை கணக்கெடுக்கும் வகையில் கணினி வழி பயிராய்வு பணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேளாண்மைத் துறை அலுவலர்கள் செய்ய வேண்டிய பணியை கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்குவது பணிச்சுமையை அதிகரிப்பதோடு, மற்ற பணிகளை செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகின்றனர். இதனை எதிர்த்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். கூடுதலாக வழங்கப்படும் பணிகளுக்கு எந்த உபகரணங்களும் வழங்கப்படவில்லை என்றும், கூடுதலாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி