ஆழியாறு பகுதியைச் சேர்ந்த கஸ்தூரிராஜா என்பவர், வால்பாறை ரோடு பகுதியில் ஆழியாறு தபால் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த ஒரு வருடமாக வாடகை பாத்திர கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் நாகராஜ் என்பவர் இரவு தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று நேற்று (செப்.,21) நள்ளிரவில் நாகராஜ் வழக்கம் போல கடைக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி அளவில் கடைக்குள் உள்ளே பிளாஸ்டிக் சேர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்த நாகராஜ் வெளியே வந்து அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் கடையிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த சம்பவம் குறித்து ஆழியாறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆழியாறு பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.