செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலின் படி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து கோவையில் இரு தினங்களாக தொண்டாமுத்தூர், ஆனைக்கட்டி பகுதிகளில் மண் எடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டோம். மொத்தம் 19 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்பகுதியில் மண்ணின் தரம் குறித்தும், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும், ஆனைக்கட்டி பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, அங்கு செயல்படும் தனியார் ரிசார்ட் சம்பந்தமாக பொதுமக்கள் முறையிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர் அந்த ரிசார்ட் மீது ஒருசில பிரச்சினைகள் குறித்து மக்கள் சிலர் குறிப்பிட்டனர். குறிப்பாக வழித்தடங்கள் குறித்து தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன் முடிவெடுப்பார் என்றார். மேலும் ரிசார்ட் பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.