பொள்ளாச்சி மாட்டுச்சந்தை: அதிக விலைக்கு விற்பனையான மாடுகள்

50பார்த்தது
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறும். அவ்வகையில் நேற்று (செப்டம்பர் 24) மாட்டுச் சந்தை நடைபெற்றது. மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 2500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த மாட்டுச்சந்தையில் பல்வேறு வகையான மாடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு பசு மாடுகள் ரூ. 35, 000 முதல் ரூ. 40, 000 வரையிலும், நாட்டு எருமைகள் ரூ. 40, 000 முதல் ரூ. 45, 000 வரையிலும் விற்பனையாகின. குறிப்பாக, காங்கேயம் காளைகள் ரூ. 55, 000 முதல் ரூ. 60, 000 வரை அதிக விலைக்கு விற்பனையானது. இந்த மாட்டுச்சந்தை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்புடைய செய்தி