எச். ராஜாவின் கருத்துக்கு பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

61பார்த்தது
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் கருத்துக்கு எதிராக, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, எச். ராஜாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட தலைவர் N. K. பகவதி பேசுகையில் பாரம்பரியமிக்க நாட்டுக்காக தங்களுடைய சொத்துக்களை வழங்கி இந்த நாட்டுக்காக பாட்டி தந்தையை இழந்து நாட்டிற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் தலைவரை பார்த்து தேசவிரோதி என்று எச். ராஜா விமர்சித்துள்ளார் என்று கூறினார். மேலும் அவர் இதற்கு மேல் ராகுல் காந்தியை எச். ராஜா விமர்சித்தால் அவர் செல்லும் இடமெல்லாம் செருப்படி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார். எச். ராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி