கோவை மாநகரில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகரில் பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர், கோவை புதூர், ஈச்சனாரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கியுள்ள பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கல்லூரி மாணவர்கள் அறைகளில் போதை பொருட்கள், ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.