கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் வசிக்கும் ஜெகதீஸ்வரன் (47) என்பவர் கடந்த 12. 09. 2024 அன்று மலுமிச்சம்பட்டியில் உள்ள அவரது மகன்களை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்த சுமார் 12 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 8 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்து, இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நெகமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று (24. 09. 2024) தனிப்படையினர் கேரளா மாநிலத்தை சேர்ந்த பைஜு (30), மற்றும் அனுக்ரா(28)
ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீட்டின் பூட்டினை உடைத்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் பேரில், இருவரையும் கைது செய்து 12 சவரன் தங்க நகைகள், ரூபாய் 6, 90, 000/- பணம் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.