சென்னை - திருப்பதி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஊத்துக்கோட்டை எனும் ஊர். இதனருகே உள்ள ராமகிரியில் அமைந்துள்ள கால பைரவர் ஆலயத்தில் கோயிலுக்குள் கோயில் இருக்கும் அற்புத காட்சியை காணலாம். கால பைரவர்தான் இந்த தலத்தின் பிரதான மூர்த்தி. அவரது கருவறை சன்னதி மற்றும் பிரகாரங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன. அதேபோன்று அருகில் வாலீஸ்வரர் தனி சன்னதி உள்ளது, அதுவும் தனிக்கோயில் போன்றே காட்சி அளிக்கிறது.