மேட்டுப்பாளையம் - Mettupalayam

கோவை: கணுவாய் தடுப்பணையில் வெள்ளநீர்- போக்குவரத்து பாதிப்பு

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கணுவாய் பகுதியில் உள்ள தடுப்பணை நிறைந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவை கணுவாய் பகுதியில் உள்ள தடுப்பணை முழுவதும் நிரம்பி மழை நீர் பெருக்கெடுத்து சங்கணூர் பள்ளம் வழியாக சென்றது. தடுப்பணையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கணுவாய்-பன்னீர்மடை இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பகுதியில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా