கல்லாறு: அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை அதிகாரிகள் குழு ஆய்வு!

61பார்த்தது
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் குழு இன்று நேரில் ஆய்வு செய்தது. கடந்த 1900 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பழப்பண்ணையில் மங்குஸ்தான், துரியன், வாட்டர் ஆப்பிள், முட்டைப் பழம், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல்வகை பழங்கள், மூலிகை செடிகள், மலர் வகைகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளுக்கான மரக்கன்றுகளும் இங்கு தயார் செய்யப்பட்டு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்பண்ணை யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், பரதசக்கிரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை நியமித்தது. இதன்படி, உயர்நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சி. மோகன், ராகுல் பாலாஜி, சந்தானராமன் மற்றும் அரசு வழக்கறிஞர் முகமது சாதிக் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். பழப்பண்ணையை தற்போது திடீரென யானை வழித்தடம் என கூறுவதை ஏற்க இயலாது என்றும் தெரிவித்தனர். ஆய்விற்குப் பின்னர் இது குறித்த விரிவான ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக் குழுவினர் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி